சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...

சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...
பிரபாகர்
  • News18
  • Last Updated: September 9, 2020, 2:19 PM IST
  • Share this:
சாஃப்ட்வேர் நிறுவனத்தின் உதவி மேலாளர் வீடியோ வாக்குமூலம் வெளியிட்டு, எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஏழுகிணறு சண்முகராஜன் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (43). இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர்ஸின் எட்டாவது மாடியில் இயங்கிவரும்  சாப்ட்வேர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் எட்டாவது மாடியில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பணிபுரிந்து வந்த அவர், நேற்று மாலை 6 மணி அளவில் மேலிருந்து கீழே குதித்துள்ளார்.


எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த அவர் இரண்டாவது மாடியில் உள்ள கேண்டீனில் விழுந்து தலை மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.

உடன் பணிபுரிந்த ஊழியர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் என்னவென்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட பிரபாகர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வாக்குமூலம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.Also read... ஃபேஸ்புக்கில் காதல்.. காதலியை தேடி நேரில் சென்றவரிடம் பைக்கை பறித்து விரட்டிய கும்பல்

வீடியோவில் தனது நிறுவனத்தில் மேலாளராக இருந்து வரும் செந்தில் என்பவர் தன்னை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருவதாகவும் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் பேசியிருந்தார்.

மேலும் கடந்த 10 மாதத்திற்கு மேலாக மேலாளர் செந்தில் தொந்தரவு செய்து வந்ததால் இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பதாகவும் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

வாக்கு மூலம் கிடைக்கப்பெற்ற காவல்துறையினர்  சாஃப்ட்வேர்  நிறுவனத்தின் மேலாளரான செந்திலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading