திருநெல்வேலியில், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாத ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து, இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் எனவும், அந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு, செம்மலை ஆகியோர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மணல்மேடு, கிராமமடை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தி திமுக மக்களை வஞ்சிக்கிறது என்றும், மக்களின் வேதனை இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் மக்களுக்கு பல துரோகங்களை செய்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அதிமுகவினர் முகமூடிகளை போட்டு நல்லவர்களை போல பொய் பேசிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, Erode Bypoll