ஊருக்கு அனுப்புவதாக கூறி சென்னையில் வடஇந்தியர்களை ஏமாற்றும் கும்பல்!

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ரயிலில் பயணம் செய்ய விரும்பும் வட இந்தியர்களிடம் பணத்தை வசூல் செய்துவிட்டு பலர் தலைமறைவாகி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஊருக்கு அனுப்புவதாக கூறி சென்னையில் வடஇந்தியர்களை ஏமாற்றும் கும்பல்!
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் வேலையின்றி தவிக்கும் வட இந்தியர்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர், லாரிகளில் செல்வோர், ரயில் மூலம் செல்வோர் என்ற எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ரயில் மூலம் சொந்த ஊருக்கு இவர்களை அனுப்பி வைப்பதாக கூறி 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பல இடங்களில் வசூல் நடைபெற்று வருவதாகவும் ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் இதுவரை தங்களை ஊருக்கு அனுப்பவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் கொடுத்து இதுவரை சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.


சென்னையை பொறுத்தமட்டில் இதுபோன்று ஏராளமான வட இந்தியர்களிடம் சில கும்பல் பணத்தை வசூல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவின் சார்பில் காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்து வரும் நிலையில் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.Also read... மறு அறிவிப்பு வரும் வரை சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க தடை


Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading