Home /News /tamil-nadu /

எல்.ஐ.சியை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

எல்.ஐ.சியை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

கடந்த ஆண்டு நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மத்திய அரசு எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்படும் என அறிவித்தது. பின்னர்  எல்ஐசி சிறப்பு சட்டம் 1956ன் சில சரத்துக்களை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது

  • News18
  • Last Updated :
எல்.ஐ.சியை தனியார்மயமாக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போது மத்திய அரசு எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்படும் என அறிவித்தது. பின்னர்  எல்ஐசி சிறப்பு சட்டம் 1956ன் சில சரத்துக்களை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அடுத்தபடியாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் ஒப்புதல் பெறுவதற்காக ஆக்கப்பட்டுள்ளது. எல்ஐசியில் அரசின் பங்கில் சுமார் 5 சதவிகிதம் விற்கப்படும் என அவ்வறிக்கை கூறுகிறது.

எல்ஐசி நிறுவனத்தில் சுமார் 42 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இதன் சொத்து மதிப்பு சுமார் 35 லட்சம் கோடி. மத்திய அரசின் ஆரம்ப கட்ட முதலீடு 5 கோடி ரூபாய். இந்த 5 கோடி முதலீட்டிற்கு ஈவு தொகையாக இதுவரை மத்திய அரசிற்கு எல்ஐசி வழங்கிய தொகை சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்.

நாட்டு நலத்திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் மக்கள் நலத் திட்டங்கள் என இதுவரை செய்த முதலீடுகள் சுமார் 32 லட்சம் கோடி. இத்தகைய நிறுவனத்தின் பங்குகளை பட்டியல் இடக்கூடாது என மத்திய அரசு ஊழியர்கள் மத்திய தொழிற்சங்கங்கள் வங்கி இன்சூரன்ஸ் அமைப்பு உள்ளிட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (சென்னை) பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது: மத்திய அரசு எல்ஐசியின் 5 சதவிகிதப் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறோம். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். மத்திய அரசு எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள், நாட்டு மக்களது கருத்தை மனதில் கொண்டு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு இந்த பங்கு விற்பனையை அறிவித்து அது தோல்வியில் முடிந்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் புதிதாக deemat அக்கவுண்ட் தொடங்கியவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடி மட்டுமே. 143 கோடி மக்கள் இருக்கக்கூடிய நாட்டில் இரண்டரை கோடி என்பது வெறும் ஒன்றரை சதவீதம்தான். பங்குகளை பெற வருமான வரிக் கணக்கை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட வருமானவரி கணக்குகளின் எண்ணிக்கை 60 லட்சம் மட்டும்தான். எனவே, மக்கள் ஆதரிக்காத, ஊழியர்கள் முகவர்கள் விரும்பாத, பங்கு விற்பனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது, எல்.ஐ.சி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம். ஒருவர் மறைவிற்குப் பிறகு,  குடும்பத்தினர் பாதுகாப்பாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை எல்ஐசி வழங்கி வருகிறது.  முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது என்று சொல்லமுடியாது நாட்டின் பல ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோடிக்கணக்கான ரூபாயை எல்ஐசி நிறுவனம் வழங்கி வருகிறது.

லாபம் தரக்கூடிய எல்.ஐ.சியை தனியார் மையம் ஆக்கும் நடவடிக்க மக்களை ஏமாற்றும் செயலாகும். இது மக்களுக்கு எதிரானது. எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது என்பது திமுக நிலைப்பாடு. ஊழியர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக ஆதரவாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொது செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 39 லட்சம் கோடி. வங்கிகளில் 160 லட்சம் கோடி மக்கள் பணம் சேமிப்பாக உள்ளது. இந்நிலையில் வங்கி, எல்ஐசி உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Also read... தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய கொரோனா தடுப்பூசி முகாம்

இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரக்கூடிய பொருளாதார. அதற்கு உதவியாக இருப்பது மக்கள் சேமிப்பு. மக்கள் திட்டங்களுக்கு வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும்,  கிராமப்புற வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்.ஐ.சி மற்றும் வங்கி முதலீடு செய்துள்ளது.

அதேபோல வங்களிலும் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட வேண்டிய தேவை இருக்கிறது. இது எல்ஐசி ஊழியர்கள் போராட்டம் மட்டுமல்ல. தனியார் மயமாக்கும் நடவடிக்கை தொடர்ந்தால் வங்கி ஊழியர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: LIC

அடுத்த செய்தி