சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அதிமுக

சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் பணியை தீவிரப்படுத்தும் அதிமுக

அதிமுக தலைமை அலுவலகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் 160 இடங்களில் போட்டியிடுவதோடு 150 வாக்காளர்ளுக்கு ஒரு நிர்வாகி என்று தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரவை தொகுதியை பலப்படுத்தும் விதமாக நிர்வாகிகளிடம் அதிமுக தலைமைகள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் மாவட்டத்திற்குள் உட்கட்சி முரண்பாடுகள் எதுவும் இல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கண்டிப்புடன் அதிமுக தலைமைகள் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Also read... கொரோனா ஊரடங்கில் ரேசனில் கூடுதல் அரசி வழங்கியது, எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் ஊழல்- முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!

மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், அதோடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை பெண்கள் ஓட்டு அதிமுகவிற்கு தான் என்று நிலை இருந்தது. இதை விட்டுவிடாமல் இருக்க வாக்குசாவடிக்கு 25 பெண்கள் அடங்கிய குழுக்களை உருவாக்கி பெண்கள் வாக்குகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையில் பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். எனவே புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, 150 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகியை நியமித்து தேர்தல் பணிகளை இம்மாதத்திற்குள் தீவிரப்படுத்தவும் அதிமுக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர். ஆனால் அதிமுக தலைமையில் கூட்டணியா? இல்லை, பாஜக தலைமையில் கூட்டணியா? என்பதிலும் இன்னும் தெளிவு இல்லாமல் உள்ளது. இந்த சூழலில் தான் தாங்கள் பெருபான்மையான இடங்களில் போட்டியிட அதிகபட்சமாக 160 இடங்களிலாவது போட்டியிட அதிமுக தலைமைகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டமும் இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது அதிமுக.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: