ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்.,10-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஈபிஎஸ் அழைப்பு

அக்.,10-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஈபிஎஸ் அழைப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

  அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

  அதிமுக உட்கட்சி மோதல் வலுவடைந்தபிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரையும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  Read More: திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி? - பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  இதுதொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்காமல் உள்ளார். இதுதொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. மேலும், அதிமுக-வின் 51-ம் ஆண்டு தொடக்க விழாவை, வரும் 17-ம் தேதி கொண்டாடுவது குறித்தும், வழக்கு விசாரணைக்குப் பிறகு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Srilekha A
  First published:

  Tags: ADMK, Edappadi Palaniswami, Tamilnadu