ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்' - அன்புமணி கருத்து

'அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்' - அன்புமணி கருத்து

அன்புமணி ராமதாஸ் - ஆளுநர் ஆர்.என் ரவி

அன்புமணி ராமதாஸ் - ஆளுநர் ஆர்.என் ரவி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என அன்புமணி கருத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று தமிழக அரசின் உரையை ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தார். மேலும் ஆளுநர் உரை முடிந்ததும் பேசிய முதலமைச்சர், அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெறும் என தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் முழுமனதோடு நிறைவேறியது. முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு அரசால் தயாரித்த உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்! தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்!

அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது! இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!”

இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

First published:

Tags: Anbumani, Pmk anbumani ramadoss, RN Ravi, TN Assembly