Home /News /tamil-nadu /

உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து...!

உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து தீ விபத்து...!

ஏசி வெடித்து விபத்து ஏற்பட்ட அறை

ஏசி வெடித்து விபத்து ஏற்பட்ட அறை

இந்த தீவிபத்து குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்துள்ளனர். மின்கசிவு காரணமாக எரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    சென்னை கீழ்பாக்கத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் ஏசி வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    சென்னை கீழ்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் முத்துராஜா(52). இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். நேற்றிரவு 10 மணியளவில் முத்துராஜா தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஏசி அறையில் உறங்கி கொண்டிருந்தார்ர். அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்து சிதறி எறிய தொடங்கியுள்ளது.

    இதனை கண்டு அலறி அடித்து முத்துராஜா வெளியில் ஓடிவந்து கீழ்பாக்கம் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.

    Also read... இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகள், கோழிகள் துன்புறுத்தப்படாமல் எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் - நீதிமன்றம்!

    இந்த தீவிபத்து குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்துள்ளனர். மின்கசிவு காரணமாக எரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Fire accident

    அடுத்த செய்தி