கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி: நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது" என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால்.

 • Share this:
  கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

  மாணவர் நலன் கருதி தமிழகத்தில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

  இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ’வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது’ என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால்.

  கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: