நன்றி..! நன்றி..! தோற்கடித்த வாக்காளர்களுக்கு போஸ்டர் அடித்த வேட்பாளர்

Local Body Election 2019 Results

நன்றி..! நன்றி..! தோற்கடித்த வாக்காளர்களுக்கு போஸ்டர் அடித்த வேட்பாளர்
  • Share this:
உள்ளாட்சி தேர்தலில் தன்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்துள்ளார்.

தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை எண்ணப்பட்டு வருகின்றன. 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

மேற்கு மாவட்டங்களில் அதிமுகவும், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் திமுகவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அற்கான சான்றிதழ் பெற்று வருகின்றனர்.


உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்தில் சேத்துவார்பட்டி 2வது வாட்டு உறுப்பினராக முருகேசன் என்பவர் போட்டியிட்டுள்ளார். முருகேசனையும் சேர்த்து 3 பேர் அந்த வார்டில் போட்டியிட்டுள்ளனர். இதில்  தங்கப்பாண்டி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

தோல்வியடைந்த வேட்பாளர் முருகேசன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், ’நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்கல’ என்றும் போஸ்டரில் தெரிவித்துள்ளார்.
First published: January 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading