வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அழிப்பு: உள்ளாட்டையில் கடிதம்: தஞ்சாவூர் இளம்பெண் மரணத்தில் திருப்பம் - மூவர் கைது

மாதிரிப்படம்

தஞ்சை மாவட்டத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

 • Share this:
  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான பாலமுருகன். இவரது மனைவி 26 வயதான தமிழழகி

  இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் ஆகி ஒராண்டு ஆகிய நிலையில் பாலமுருகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.

  அதனால் மனைவி தமிழழகியை ஆவணம் பகுதியில் பத்து வீடுகள் அடங்கிய காலனிப்பகுதியில் தனியாக வீடெடுத்து தங்க வைத்து சென்றுள்ளார் பாலமுருகன். இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு தமிழழகி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  சடலத்தை கைபற்றிய திருச்சிற்றம்பலம் போலீசார் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழழகிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது

  அப்போது திடீரென தமிழழகியின் உள்ளாடையில் கடிதம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தன் தற்கொலைக்கு அதே காலனி பகுதியில் வசிக்ககூடிய மணிகண்டன், ஆகாஷ் மற்றும் சிறுவன் ஆகியோர் தான் காரணம் என்று கைபட எழுதியுள்ளார்

  இதையடுத்து மூன்று பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். உறவினர்கள், கணவர் யாரும் உடன் இல்லாத நிலையில் தமிழழகி இரண்டு ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.

  இதை நோட்டம்விட்ட இளைஞர்கள் அவரிடம் அத்துமீறி பேசியுள்ளதாக தெரிகின்றது. அதற்கு எதிர்பு தெரிவித்த தமிழழகி இது போன்று பேசினால் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று இளைஞர்களை எச்சரித்துள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் இருவருடன் தமிழழகியை தொடர்பு படுத்தி பேச தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் அனைவரும் பேசி கொள்ளும் அளவிற்கு சென்று பெண்ணின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.

  அவதூறு மற்றும் புரளியால் கணவன் துணையின்றி தனிமையில் இருந்த தமிழழகி மனவேதனையில் இருந்துள்ளார். மன அழுத்தம் அதிகரிக்க கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

  பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல், அவதூறு பரப்புவது, சாதிய வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் மணிகண்டன், ஆகாஷ் மற்றும் சிறுவன் ஒருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

  மேலும் தமிழழகியின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் வாட்சப் தகவல்களை அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுப்பிடித்துள்ளனர். அதனால் அவரது செல்போனை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Karthick S
  First published: