தமிழகத்தில் கடந்த மே 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக மு.க.ஸ்டாலினை தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக நியமித்தார். மு.க.ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்கவுள்ளவர்கள்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நாகை மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ இல்லை. கூட்டணிக் கட்சியினர் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற திமுகவினரில் ஒருவர், திருவாரூர் - பூண்டி கலைவாணன், கும்பகோணம் - அன்பழகன், திருவையாறு - துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் அமைச்சராக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அமைச்சர்கள் பட்டியலில் நீர் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.