Home /News /tamil-nadu /

மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி

மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம்? பொதுமக்கள் அதிர்ச்சி

மின்சார அளவீட்டு கருவி

மின்சார அளவீட்டு கருவி

இந்த மின் கட்டணத்தைக் கட்ட தவறினால் மின் இணைப்பை துண்டித்து விடுவதாக அதிகாரிகள் கூறுவதாக குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் அண்ணாநகர்  பகுதியில், மின் கட்டணம் செலுத்திய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம் கட்ட சொல்லி மின்சார வாரியத்தினர் கூறுவதாகக் கூறி பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் அண்ணாநகர்  பகுதியை சேர்ந்தவர் செல்வகிருஷ்ணன். இவரின் வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல், மே, ஜீன் ஆகிய மூன்று மாதத்திற்க்கான மின் கட்டணத்தை கணக்கீடு செய்யாத காரணத்தினால், 2019 ஆண்டில் உள்ள மின்கட்டணத்தை கட்டுமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து,  2019 ஆண்டில் ஏப்ரல், மே, ஜீன்  மாதத்தில் வந்த தொகையான 4,948 ரூபாயை கட்டியுள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் கணக்கீடு செய்ய வந்த ஊழியர்கள் ஜீலை மற்றும் ஆகஸ்ட் இரண்டு மாதங்களை மட்டும் கணக்கீடு செய்யாமல், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய ஏப்ரல், மே, ஜீன் மாதங்களையும் சேர்த்து கணக்கீடு செய்து, ரூபாய்  10,000  கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகிருஷ்ணன் மின்வாரிய அதிகாரிகளிடம் ஏப்ரல், மே, ஜீன்  ஆகிய மூன்று மாதத்திற்க்கான கட்டணத்தை செலுத்திவிட்டேன், ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த கூறுகிறார்கள் என கேட்டதற்கு மின்வாரிய ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

“இதுகுறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே கட்டிய மாதத்திற்கு மீண்டும் மின் கட்டணம் செலுத்த சொன்னால் அது எப்படி செலுத்த முடியும், அப்போது மூன்று மாதத்திற்கான மின் கட்டணமான 4,948 ரூபாய் எங்கே என கேள்வி எழுப்புகிறார்.

மேலும், இதேபோல் தங்கள் பகுதிகளில் ஏற்கனவே மின் கட்டணம் செலுத்திய மாதங்களுக்கு,  மீண்டும் மின் தொகை கணக்கீடு செய்து கட்டணம் கட்ட சொல்வதாகவும், இதுகுறித்து கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை, கட்டணம் கட்ட தவறினால், மின் இணைப்பை துண்டித்து விடுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

Must Read : முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

எனவே உடனடியாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Suresh V
First published:

Tags: Electricity bill, Thanjavur

அடுத்த செய்தி