தஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர் காவல் நிலையம்

தஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை விற்பனை செய்த காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை, தனியாரிடம் கொடுத்து விற்பனை செய்த பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளரையும் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் பகுதியில், சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, விற்கப்பட்ட 434 மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், முறையாக வழக்குப் பதிவு செய்து, தொடர்புடைய நபரை கைது செய்யாமல், எச்சரித்து அனுப்பியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை, வேறொருவர் மூலம் விற்று, அந்த பணத்தை போலீசார் பங்கு போட்டுக் கொண்டதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, பட்டுக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் விசாரணை மேற்கொண்டார். ஸ்டேஷன் 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் தஞ்சை டி.ஐ.ஜியிடம் அறிக்கை அளிக்கப்பட்டு டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவின் பெயரில் காவல் கண்காணிப்பாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், எஸ்.எஸ்.ஐ துரையரசன், ஏட்டு ராமமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தொடர் விசாரணையில், மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு அறிக்கை அனுப்பாமல் மறைத்த, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெத்தபெருமாளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், பணியிடை நீக்கம் செய்தார்.
Published by:Karthick S
First published: