• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்தல் - இளைஞர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்தல் - இளைஞர் கைது

கோவிந்தராஜ்

கோவிந்தராஜ்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது.

  • Share this:
தஞ்சையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காட்டுப்பகுதியில் தனியாக வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதியவருக்கு  மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளார். கால்நடைகளை வளர்த்து வரும் முதியவர் அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். முதியவரின் மூத்த மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். முதியவரின் பராமரிப்பில் அந்தப்பெண் உள்ளார்.

Also Read:  கோர விபத்து..! திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பலி

முதியவர் தான் வளர்த்து வரும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட மகளை வீட்டில் தனியாக விட முடியாததால் தன்னுடன் மகளையும் அழைத்துச் செல்வார். நேற்று வழக்கம் போல் தந்தையுடன் அவரது மகள் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டு பகுதிக்கு ஒட்டி சென்றுள்ளார்.

அப்போது மகளை தனியாக விட்டுவிட்டு தந்தை வேறு பகுதியில்  மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த கால்நடைகளை கவனித்துக்கொள்ள  சென்று விட்டார். இந்தநிலையில் அங்கு வந்த சென்னம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது26)  என்ற இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.

Also Read:  குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு இல்லை.. மனநல மருத்துவர் அளித்த சான்று

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த அந்தப்பெண்ணை தாக்கி அவரை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பெண் சத்தம் போட்டுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்ட முதியவர் சம்பவ இடத்துக்கு வந்தார். பெண்ணின் தந்தை வருவதை பார்த்த உடனே சம்பவ இடத்தில் இருந்து கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார். ரத்தக்காயங்களுடன் பெண் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: