தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மினி பேருந்து ஒன்று தராசுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அடிக்கடி பழுதாகி நின்று சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த இளைஞர் தாராசுரம் மார்கெட் நிறுத்ததில் இறங்கி சென்றுவிட்டார். இந்நிலையில். மினி பேருந்து எலுமிச்சங்காய் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞர் பேருந்தை நிறுத்தி, பட்டாகத்தியுடன் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரையும், நடத்துனரையும் வெட்டுவது போல் மிரட்டி அவர்களை தாக்கியுள்ளார்.

நடத்துனரை தாக்கிய இளைஞர்
Must Read : செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை
இது பேருந்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் கும்பகோணத்தை சேர்ந்த ஹரி என்பது தெரியவந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.