தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கல்லுகுளம் பகுதியில் மாநகராட்சியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது தங்கமா என்ற பெண் தனக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என புகார் எழுப்ப உதயநிதி ஸ்டாலினினை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்க முடியாத உதயநிதி மனுவாக எழுதிக் கொடுக்கும்படி சமாளித்ததோடு சட்டமன்ற உறுப்பினரை தேடினார். ஆனால், அவரை காணவில்லை. மற்றொரு பெண்ணான கவிதா நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைத்து கேள்வி எழுப்பினார்.
அடுத்தடுத்து பெண்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி எழுப்பியதால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடர முடியாமல் அடுத்த பகுதி பிரச்சாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து கேள்வி கேட்ட பெண்களை திமுகவினர் சூழ்ந்ததால் பிரச்சாரம் நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Must Read: இந்தியாவின் அஸ்திவாரத்தை இடித்து நொறுக்க ஆர்.எஸ்.எஸ், பாஜக களமிறங்கியுள்ளன - தி.வேல்முருகன் காட்டம்
இதையடுத்து நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் தாய்க்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றுதான் கேட்டதாகவும் வேறு ஒன்றும் கேட்கவில்லை என கூறி அப்பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.