தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு வெளியானாதால், அரசு மருத்துவமனை, சிறப்பு தடுப்பூசி முகாம் உள்ளிட்ட மையங்களில் பொதுமக்கள் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு
தடுப்பூசி வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் கால தாமத்திற்கு பிறகு தடுப்பூசிக்கான டோக்கன் மட்டும் வழங்கப்பட்டது.
இதனால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் காலை ஏழு மணி முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் பொதுமக்கள் வெயிலில் நீண்ட வரிசையில் டோக்கன் வாங்க காத்திருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக லெட்சுமி நாராயண புரம் பகுதியை சேர்ந்த வள்ளிகண்ணு (40) என்று பெண் காலை 7 மணி முதல் வரிசையில் நின்றுள்ளார்.
நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் அந்த பெண் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.