நிதி நிறுவனம் நெருக்கடியால் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடரும் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாட்டைச் சேர்ந்தவர் அய்யப்பன். அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் ஹோட்டல் விரிவாக்கத்துக்காக, எக்விடாஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019ம் ஆண்டு, 25 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். மாத தவணையாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா முதல் அலை ஊரடங்கால், கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த சமயத்தில் நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து அதிராம்பட்டினம் போலீசில் அய்யப்பன் புகார் அளித்தார். போலீசார் தலையிட்டு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வசூலித்து கொள்ள தெரிவித்தனர். இதன்படி, அய்யப்பன் மாதத் தவனையை கட்டி வந்துள்ளார். தற்போது இரண்டாவது அலை ஊரடங்கால், மீண்டும் ஹோட்டல் தொழில் முற்றிலும் முடங்கியது. இதனால் அய்யப்பனால், கடன் தொகையை செலுத்த முடியவில்லை.
இதனால் நிதி நிறுவனத்தினர், அய்யப்பன் வீட்டுக்கு சென்று மிரட்டியும், குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த அய்யப்பனின் தாய் தமிழரசி (50) கடந்த 18ம் தேதி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடம் கடன் தொகைகளை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது என அரசு எச்சரித்தும், அரசின் உத்தரவுகளை மீறி பொதுமக்களிடம் தொடர்ந்து நுண் கடன் முகவர்களும், தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் அத்துமீறி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம், ஆட்டோவிற்கு மாதத் தவனை கட்ட முடியாததால், நிதி நிறுவனங்களின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எஸ்.குருநாதன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.