• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த மனைவி..

கணவன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த மனைவி..

கைதான மனைவி வீரம்மாள்

கைதான மனைவி வீரம்மாள்

ஆத்திரத்தில் கணவன் மீது வெந்நீர் ஊற்றி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

  • Share this:
குடும்ப பிரச்னையில் கணவன் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி, சிகிச்சை பலன் இன்றி கணவன் உயிரிழப்பு மனைவி கைது.

தஞ்சையை அடுத்துள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் விவசாயி சின்னையன் (62) . இவருடைய மனைவியின் வீரம்மாள் (55). வயதான இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு சின்னையன் - வீரம்மாள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கணவன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த வீரம்மாள் வீட்டில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து சின்னையன் மீது ஊற்றியுள்ளார்.

Also Read: மண் அகற்றுவதில் தகராறு.. ஊராட்சி மன்ற தலைவருக்கு அடி உதை - வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

கொதிக்கும் நீரை மனைவி ஊற்றியதால் சின்னையன் வலியால் துடித்துள்ளார். வெந்நீர் ஊற்றியதால் அவரது உடல் முழுவதும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். வலியால் துடித்துக்கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read: சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சின்னையன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் வீரம்மாளை கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: