தஞ்சாவூர் சப்பரம் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வி.கே. சசிகலா, தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று அப்படி கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது, தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். என தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று இரவு தேர்த்திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக் கம்பி தேரின் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களின் உறவினர்களை வி.கே.சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று அப்படி கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது.
தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும். இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். ஓட்டு போட்ட மக்கள் தான் எனவே இவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். உரிய வரைமுறைகளை ஏற்படுத்தினால், வருங்காலங்களில் இதுபோல் உயிர் பலியை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும், இப்படி நடந்து விட்டது அதனால் இது சரியில்லை என்று கூற முடியாது. அதற்கு பதிலாக ஆக்கபூர்வமான செயலை சொல்வது தான் சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.