கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை தலைமை அறிவித்தபடி வழங்காத திமுக நிர்வாகிகளை கண்டித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைமை அறிவித்தபடி துணைத் தலைவர் பதவியை வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கல்யாணபுரத்தில் இருந்து பேரணியாக வேப்பத்தூர் பேரூராட்சி நோக்கி செல்ல திரண்டனர்.
Must Read : தமிழக பட்ஜெட் : கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி, மசூதி, தேவாலயங்களுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெண்மணி தலைமையில் திமுக நிர்வாகிகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணி செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.