2000 வாங்கிட்டு என்கிட்டயே.. நோ பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஏகவசனம் பேசிய விஏஓ - வைரலாகும் வீடியோ

தகராறு செய்த கிராம நிர்வாக அலுவலர்

நோ பார்கிங்கில் கார் நிறுத்திவிட்டு ஏகவசனம் பேசிய கிராம நிர்வாக அலுவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
நோபார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சென்ற கிராம நிர்வாக அலுவலர் போலீஸார் எடுத்த நடவடிக்கையால் ஏகவசனம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கும்பகோணம் -தஞ்சை நெடுஞ்சாலையில் ஆயிகுளம் பகுதியில்  போக்குவரத்தை சீர் செய்துக்கொண்டிருந்த காவலர் ஆய்வாளர் சரவணன் அங்கு நோ பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை லாக் செய்துவிட்டு சென்றுள்ளார். அந்த கார் திருவிடைமருதூர் அருகே உள்ள பவுன்ரீகபுரம் கிராம நிர்வாக அலுவலராக உள்ள சுரேஷ்-க்கு சொந்தமானது. சுரேஷ் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

Also Read: எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கடையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் தனது கார் டயரை போலீஸார் லாக் செய்திருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் சத்தம் போட்டுள்ளார். காரை லாக் செய்துவிட்டு போன காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசத்தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீஸாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுரேஷ், ‘ எஸ்.பி வேணும்னாலும் இங்க வரச்சொல்லு, அந்த ஆர்.ஐ என்கிட்ட 2000 வாங்குனான்.. கார் லாக் பண்ணிட்டு போறீங்க.. லாக் நீ எடுக்குறியா இல்லையா. எப்படி எடுக்கனும்னு எனக்கு தெரியும்.. நான் இங்க ரோட்டுல நிக்கனுமா.. என சத்தம்போட்டுள்ளார்.

Also Read: சேலம் அருகே அமைக்கப்பட்டு வரும் உலகின் உயரமான நந்தி சிலை

போக்குவரத்து காவல் ஆய்வாளரை  கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அவன் இவன் என ஒருமையில் பேசியும், SP வேண்டுமானாலும் வரச்சொல்லு, என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: