பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது!

பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது; கத்தியை அன்பளிப்பாக வழங்கிய நண்பரும் கைது!

பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லவே பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

  • Share this:
    பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய இரட்டையர்கள் கைது செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள கொரநாட்டு கருப்பூர் IFHD நகரை சேர்ந்த இரட்டையர்களான ராம் - ரவி ஆகியோர் கடந்த 8ஆம் தேதி இரவு தங்களது பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது இவர்களது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் பட்டா கத்தியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அன்பளிப்பாக வழங்கப்பட்ட கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

    இந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லவே பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

    Also read: ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் கோவை வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு!

    இதனை தொடர்ந்து தனிப்பிரிவு காவல்துறையினர்  IFHD நகரைச் சேர்ந்த ராம், ரவி ஆகிய இரட்டையர்களையும் மற்றும் பட்டா கத்தியை அன்பளிப்பாக வழங்கிய இவர்களது நண்பர் மணி ஆகிய மூவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published: