திமுக பிரமுகருடன் வாக்குவாதம்... இரவோடு இரவாக மாற்றப்பட்ட போக்குவரத்து காவலர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

திமுக பிரமுகருடன் போக்குவரத்து காவல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

 • Share this:
  தஞ்சையில், திமுக பிரமுகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுத படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தஞ்சை அண்ணா சாலையில் உரிய ஆவணம் இல்லாமல் வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோகன், 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுள்ளார். உடனே சரக்கு வாகன ஓட்டுனர், தஞ்சை நகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார்.

  சம்பவ இடத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த நீலகண்டன், பணியில் இருந்த உதவி ஆய்வாளரை மிரட்டி வாகனத்தை விடுவிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. அப்போது உதவி ஆய்வாளர் மோகன், இதற்கெல்லாம் ரெகமெண்டேஷனுக்கு வரும் நீங்கள் எனது தெருவில் இரண்டு மாதமாக தண்ணி வரவில்லை, அதை சரி செய்ய வரவில்லையே எனக் கேட்டார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் மோகன் இரவோடு இரவாக ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: