ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநரின் நடவடிக்கை இனி வரும் காலங்களில் மாறும் - பொன்முடி

ஆளுநரின் நடவடிக்கை இனி வரும் காலங்களில் மாறும் - பொன்முடி

பொன்முடி

பொன்முடி

மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை, மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்க கூடாது என பொன்முடி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான கி.வீரமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாய பாடமாக இருக்க கூடாது என தெரிவித்தார்.

Also Read : வன்முறை விதை தூவலை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் சேகர் பாபு!

கடந்த காலத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு திமுக கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் தற்போது ஆளுநர் நேற்று துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, ஆளுநர் கல்வித்துறை குறித்து கேட்டுள்ளார் அவ்வளவுதான் என்றும், அவரின் நடவடிக்கை வர வர மாறும் என்று அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

First published:

Tags: DMK, Minister Ponmudi, Tamilnadu