முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தஞ்சாவூர் அருகே நடராஜர் சிலையை கடத்த முயன்ற 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே நடராஜர் சிலையை கடத்த முயன்ற 3 பேர் கைது

நடராஜர் சிலை

நடராஜர் சிலை

Thanjavur District: தஞ்சாவூர் அருகே நடராஜர் உலோகச் சிலை கடத்த முயன்ற 3 பேரை, சிலை திருட்டு தடுப்புக் காவல் துறையினர் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை கும்பகோணம் வழித்தடத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் எம். சின்னதுரை, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சிலை திருட்டு தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரி கரைமேடைச் சேர்ந்த கேசவன் மகன் பிரபாகரன் (27), அல்லாபாக்ஸ் மகன் பைசல் அகமது (27), அய்யம்பேட்டை சக்கராபள்ளி எஸ். தோட்டத்தைச் சேர்ந்த சுலைமான் பாட்சா மகன் சாகுல்ஹமீது (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடம் நடத்திய சோதனையில், பூதத்தின் மேல் வலது காலை வைத்தும், இடது காலை வலப்பக்கம் தூக்கிய நிலையிலும், 21 சுடருடன் கூடிய திருவாச்சியில் 13ஆவது சுடர் அறுத்து எடுக்கப்பட்ட நிலையிலும், முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடையும் கொண்ட நடராஜர் உலோகச் சிலையை விற்பதற்காக அவர்கள் மூவரும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

Must Read : நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது

பின்னர், இந்தச் சிலையை பறிமுதல் செய்த காவல் துறையினர்  பிரபாகரன், பைசல் அகமது, சாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Idol smuggling, Idol Theft, Thanjavur