முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?

தஞ்சாவூர் தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி..? 94 ஆண்டுகளில் இல்லாத கோர விபத்து பற்றி ஊர் மக்கள் கூறுவது என்ன?

மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு

Thanjavur : தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது தேரின் மீது மின் கம்பி உரசியதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கு உயரமாக சாலை அமைத்ததுதான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது.

இதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து இந்த விபத்தில், தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி:

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த களிமேடு பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், நேற்று இரவு 10 மணிக்கு தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊரை சுற்றி வந்து திரும்ப கோவிலுக்கு செல்லும். ஊரை சுற்றிவிட்டு கடைசியாக கோவிலுக்கு திரும்பும்போது சாலைக்கு மேல் உயர்மின்சார கம்பி அருகில் இருந்துள்ளது. இந்த ஆண்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. புதிய சாலை ஒன்றரை அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது உயர்மின்சார கம்பி சாலைக்கு மேல் வரும் வகையில் இருந்துள்ளது. அப்போது, தேரை இழுத்தவர்கள் தேரை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது.

எனவே, மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்ப முடியாமல், பின்னர் சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர். அவ்வாறு, தேரை இழுக்கும்போது தேரின் உச்சியில் இருந்த கும்பம் சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது.

தேரின் உச்சியில் இருந்த கும்பம் இருந்த பகுதியாது, மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அதன்படி, தெருக்களில் வரும்போது மின்கம்பிகள் இருக்கும் இடங்களில் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தி தேரின் உயரத்தை குறைத் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், விபத்து நடந்த பகுதியில், சாலையில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தவில்லை என்று சொல்லப்பபடுகிறது. இதை தேரை இழுத்த நபர்களும், சிறுவர்களும், ஜெனரெட்டரை இயக்கி வந்த நபரும் கவனிக்காததால், சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது.

இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் தேர் மற்றும் ஜெனரேட்டரை கொண்டு வந்த வாகனம் மீது பாய்ந்துள்ளது. இதனால், தேரை பிடித்திருந்தவர்கள், ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர், தேரில் அமர்ந்திருந்த நபர் உள்ளிட்டோர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவர்கள் தூக்கி வீசப்பட்டும், மின்சாரம் பாய்ந்ததால், உடல் கருகியும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர் விவரம்:

இந்த விபத்தில், மோகன் (வயது 22), பிரதாப் (வயது 36), ராகவன் (வயது 24), அன்பழகன் (வயது 60), நாகராஜன் (வயது 60), செல்வம் (வயது 56), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ், சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) ஆகிய 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு:

இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலைதான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய சாலையை உடைத்து போடாமல் பழைய சாலை மீது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சாலை போடப்பட்டதால் பக்கவாட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் நிலை தடுமாறி விழுந்ததும், இந்த விபத்து ஏற்பட்ட ஒரு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ

மேலும், பழைய தார் சாலையை பெயர்த்து எடுத்து போடாமல் அதன் மேலேயே போடப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Car Festival, Thanjavur