ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குண்டடிபட்ட சிறுவனின் உடல்நிலை : அமைச்சர் விளக்கம்

குண்டடிபட்ட சிறுவனின் உடல்நிலை : அமைச்சர் விளக்கம்

அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன்

Tanjore District News : தலையில் துப்பாக்கி குண்டால் காயம்ப்பட்டு  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தியின் உடல் நலம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

துப்பாக்கி குண்டால் காயமடைந்த சிறுவன் நலமுடன் இருக்கிறான். தேவையென்றால் தனியார் மருத்துவமனை உயர்தர சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது என விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தஞ்சையில் விளக்கம் அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில், தலையில் துப்பாக்கி குண்டால் காயம்ப்பட்டு  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் புகழேந்தியின் உடல் நலம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அவரது  பெற்றோர்களுக்கு  ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிறுவன் நலமுடன் இருக்கிறான். தேவையென்றால் தனியார் மருத்துவமனை உயர்தர சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குண்டடி பட்ட சிறுவன்

Must Read : தமிழக சட்டமன்ற கூட்டம் - எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை

தற்போது தற்காலிகமாக அந்த பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கான நிரத்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Tanjore