• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளர் உயிரிழப்பு...!

தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறிய வேட்பாளர் உயிரிழப்பு...!

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டடும் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும், அவ்வாறு வெற்றி பெறாவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறி வீடியோவை வெளியிட்டிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தேர்தலில் என்னை வெற்றி பெற வைக்காவிட்டால் நான் உயிருடன் இருக்கமாட்டேன் என கூறியது போல் உயிரிழந்த சுயேட்சை வேட்பாளர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தவர்  வி.பாலகிருஷ்ணன். இவர் பட்டுக்கோட்டை வட்டம் சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் வாக்கு பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு அவர் பேசி வெளியிட்ட ஆடியோ தற்போது சமுக வளைதளங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Also read... கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெமிடிசிவிர் மருந்து கிடைக்காததால் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்...!

    பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டடும் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும், அவ்வாறு வெற்றி பெறாவிட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் கூறியது போலவே தற்போது கொரோனாவிற்கு அவர் உயிரிழந்திருப்பது பட்டுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - எஸ்.குருநாதன்



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: