Home /News /tamil-nadu /

நெல்லின் ஈரப்பதம் : 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தகவல்

நெல்லின் ஈரப்பதம் : 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தகவல்

நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு

நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு

ஈரப்பதத்தை அறிய நெல்மணிகளை சேகரித்து, சென்னையில் உள்ள பரிசோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மழையால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், இது குறித்து ஆய்வு செய்த மத்திய குழு, நெல்லின் ஈரப்பதம் குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 17 சதவீதம் வரை மட்டுமே உள்ள நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பதால், பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் நெல்லின்  ஈரப்பதத்தை உயர்ந்த வேண்டும் என தமிழக அரசு சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

இதில்  தென்னிந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு துணை இயக்குனர் எம்.இசட்.கான், தொழில்நுட்ப அலுவலர்கள் பிரபாகரன், யூனஸ் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள விளாங்குடி, அரசூர், தென்னமநாடு, ஒரத்தநாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்து நெல்மணிகளை சேகரித்து கொண்டு சென்னையில் உள்ள பரிசோதனை மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி, 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Must Read : சேலம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கன மழை பெய்யும் என அறிவிப்பு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆய்வு என்பது காலம் தாழ்த்தி நடத்துவதாகவும், இன்னும் 15 நாட்களுக்குள் குறுவை பருவமே முடிந்து விடும், எனவே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Delta Farmers, Farmers

அடுத்த செய்தி