Home /News /tamil-nadu /

மேகதாது விவகாரம் : தமிழக அரசுக்கு காவிரி உரிமை மீட்புக்குழு முக்கிய கோரிக்கை

மேகதாது விவகாரம் : தமிழக அரசுக்கு காவிரி உரிமை மீட்புக்குழு முக்கிய கோரிக்கை

தஞ்சையில் போராட்டம்

தஞ்சையில் போராட்டம்

Thanjavur : காவிரி மேலாண்மைக் கூட்டத்தை தமிழக அரசு நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். வஞ்சகமாக செயல்படும் அதன் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
காவிரி ஆணையக் கூட்டத்தில், மேகதாது அனுமதி கோரிக்கையை, கர்நாடக அரசு தொடர்ந்து வைத்தால், அந்த கூட்டத்தை தமிழக அரசு நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும். தொடர்ந்து வஞ்சகமாக செயல்பட்டு வரும் அதன் தலைவர் ஹல்தரை நிரந்திரமாக மாற்ற வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டத்தில் வலியுறுதியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில், அணை கட்ட முயற்சித்து வரும், கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் மத்திய அரசை கண்டித்தும், இதுவரை காவிரி பிரச்சினை தொடர்பாக கண்டனம் தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழக அரசு காவிரி காப்பு நாளென்று அறிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம், பேரணி நடத்த வேண்டும். அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களை இணைத்து கூட்டம் நடத்த வேண்டும்.

Must Read : தமிழகத்தில் ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு

காவிரி ஆணையத்தில், மீண்டும் மீண்டும் மேகதாது அணை கட்ட அனுமதி கோரி, கர்நாடக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தால், தமிழக அரசு நிரந்தரமாக அந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். வஞ்சகமாக செயல்படும் அதன் தலைவரை மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Cauvery Protest, Cauvery water

அடுத்த செய்தி