ஊரடங்கு காலத்திலும், பட்டா கத்தியுடன் சாலைகளில் இளைஞர்கள் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சாலையில் சுற்றித் திரிவோருக்கு அபராதம் விதித்து வரும் போலீசார், கொரோனா பரிசோதனை போன்றவையும் மேற்கொள்கின்றனர். இதையும் மீறி சாலையில் இளைஞர்கள் சுற்றித் திரிவது தொடர்ந்து நடந்தேறுகிறது. கொரோனா அச்சமின்றி இளைஞர்கள் அதிகளவில் சுற்றித் திரிவதை போலீசார்
கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூரை சேர்ந்த முகேஷ்குமார், சந்தோஷ்குமார், முருகானந்தம், கபிலன் ஆகிய இளைஞர்கள் தஞ்சாவூர் - ஒரத்தநாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி உடன் நின்று கொண்டு வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க.. தஞ்சையில் 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை..
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.