முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றும் வறுமை காரணமாக கானல் நீராகும் ஐ.ஏ.எஸ். கனவு!

அருண்

முதன்மை தேர்விற்கான பயிற்சியை மேற்கொள்ள  வசதியில்லாததால், தன்னுடைய ஐஏஎஸ் கனவு கானல்நீராகிவிடும் என எண்ணி மன வேதனை அடைந்த அருண்,  தனது உறவினர்கள், நண்பர்களிடம் படிப்பை தொடர பணஉதவி கேட்டு கந்தலாடையுடன், வாகன வசதி இல்லாததால் செருப்பில்லாத கால்களுடன் அலைந்து வருகிறார்

  • Share this:
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று, மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் இளைஞர் ஒருவரின்  ஐ.ஏ.எஸ். கனவு கானல் நீர் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் குமபகோணம் சகாஜி தெருவை சேர்ந்தவர் அருண் (29), இவரது தந்தை ரகுபதி சிறுமூளை பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக உள்ளார். அதேபோல் அவரது தாய் பார்வதியும் கண் பார்வையற்றவர். இந்த பெரும் சிரமத்திற்கிடையில்  அருண் சமையல் கூலிவேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றியும், தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார். எப்படியாவது படித்து ஐஏஎஸ்ஆக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் அவர் படித்து வருகிறார்.   இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக போதிய வருமானம் இல்லாமல் இருந்தும் மிகவும் சிரமப்பட்டு ஐஏஎஸ் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீதமுள்ள முதன்மை தேர்விற்கான பயிற்சியை மேற்கொள்ள  வசதியில்லாததால், தன்னுடைய ஐஏஎஸ் கனவு கானல்நீராகிவிடும் என எண்ணி மன வேதனை அடைந்த அவர்,  தனது உறவினர்கள், நண்பர்களிடம் படிப்பை தொடர பணஉதவி கேட்டு கந்தலாடையுடன், வாகன வசதி இல்லாததால் செருப்பில்லாத கால்களுடன் அலைந்து வருகிறார்.

மேலும் படிக்க: ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!
இந்நிலையில் அழுக்கு வேட்டி, கசங்கிய சட்டையுடன், சவரம் செய்யாத தாடியுடன் கும்பகோணம் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மனுவுடன் வந்த அவரை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்தனர். பின்னர் எம்.எல்.ஏ அன்பழகன் அவரை உள்ளே அழைத்து பேசியபோது, ஐஏஎஸ் படிப்பை தொடர பண உதவி செய்யுமாறும், தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் எடுத்துரைத்தார். வறுமை போராட்டைத்தையும் மீறி ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற  அருணின் லட்சியத்தை பாராட்டி உடனடியாக தனது சொந்தபணம் ரூ.30 ஆயிரத்தை வழங்கி  நன்றாக படித்து ஐஏஎஸ் தேர்வாகி நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என வாழ்த்தினார்.

இதையும் படிங்க: தேசிய காயகல்பம் விருது பெற்ற மேலராமநதி ஆரம்ப சுகாதார நிலையம்!


இதுகுறித்து அருண் கூறும்போது, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது என்னுடை கனவு, சாமானிய மக்களும் எளிதில் என்னை அனுகி அவர்கள் கோரிக்கையை தெரிவிக்கும் அதிகாரியாகவும், மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் அதிகாரியாகவும் இருக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

 

செய்தியாளர், குருநாதன்
Published by:Murugesh M
First published: