முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..

பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..

சாக்கடையில் ஆண் குழந்தை வீச்சு

சாக்கடையில் ஆண் குழந்தை வீச்சு

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பெண்மணி அக்குழந்தையை கொண்டு வந்து சாக்கடையில் வீசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. குழந்தையை  சாக்கடையில் போட்டுவிட்டு, கட்டையால் வைத்து அப்பெண்மணி அமுக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தஞ்சாவூர் மாவட்டத்தில், பிறந்த ஆண் குழந்தையை கழிவுநீர் சாக்கடையில் பெண்  ஒருவர் போடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை அருகே மேல அலங்கம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் இன்று  காலை சாக்கடையை தூய்மை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மேற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய காவலர்கள் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பெண்மணி அக்குழந்தையை கொண்டு வந்து சாக்கடையில் வீசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

மேலும் படிக்க: திமுக நிர்வாகிகளை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்...

குழந்தையை  சாக்கடையில் போட்டுவிட்டு, கட்டையால் வைத்து அப்பெண்மணி அமுக்கியுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Baby boy killed, Child, Thanjavur