நள்ளிரவில் தாயை கொன்று விடிய விடிய உடல் அருகே அமர்ந்திருந்த மகன் - தஞ்சையில் நடந்த கொடூரம்

தஞ்சை தாய் கொலை

தஞ்சையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாயை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தாயின் கழுத்தை அறுத்து படுகொலை  செய்துவிட்டு,  விடிய விடிய இரத்தத்துடன் தாயின் உடல் அருகே அமர்ந்திருந்த மகன் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஏழு குழந்தைகளில் ஆறு பேருக்கு திருமணம் ஆகி தனி தனியாக வசித்து வருகின்றனர்.  இவரது கடைசி மகன் பழனி (36). இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்ற இவர் மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Also Read: பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. அடம்பிடிக்கும் இளைஞர்.. விழிபிதுங்கும் வங்கி ஊழியர்கள்

தாயும், திருமண ஆகாத மகன் பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தாயுக்கும் மகனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில்  ஆத்திரமடைந்த பழனி தாயின் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது சரஸ்வதி கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பழனியை கைது செய்தனர். மேலும் இரவு தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தாயின் உடல் அருகே ரத்தத்துடன் விடிய விடிய பழனி அருகில் அமர்ந்து இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Ramprasath H
First published: