• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனாவால் குடும்பத்தில் 3 பேர் பலி: உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாக பெண் வேதனை!

கொரோனாவால் குடும்பத்தில் 3 பேர் பலி: உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாக பெண் வேதனை!

பாதிக்கப்பட்ட பெண்

பாதிக்கப்பட்ட பெண்

குடும்பத்தில் வருவாய் ஈட்டிவந்த மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால், உணவுக்கு கூட வழியின்றி தவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனா தொற்றால் இறந்ததால், வருமானமின்றி தவிப்பதாகவும்,  கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்  கோரிக்கை வைத்துள்ளார்.

    தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் இமானுவேல் விமல் ராஜ். இவருடைய மனைவி எஸ்தர் ருஷ்யா . இவர்களுக்கு ஜாஷ்வா, ஜோய் ஆபிரகாம் என்ற 2 மகன்கள் உள்ளனர்.கடந்த மாதம் 14-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இமானுவேல் விமல்ராஜ் மரணமடைந்தார். மேலும் இமானுவேல் விமல்ராஜின் தந்தை ஜெயராஜ் , தாயார் கிளாரா  ஆகியோர் கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தனர்.இதையடுத்து எஸ்தர் ருஷ்யா மற்றும் அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பினார்.

    ஜெயராஜும், கிளாராவும் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த கணவர், மாமனார், மாமியார் ஆகிய  3 பேர் உயிர் இழந்ததால் எஸ்தர் ருஷ்யா வருமானமின்றி குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப் பட்டதால் எஸ்தர் ருஷ்யா வேலை இல்லாமல் தவித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும். மேலும் தனது பிள்ளைகளுடன் ஒரு வேளை உணவுக்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் தனது மகனுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கோவிந்தராவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார், அதில் தங்களது குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்ததால் வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் .  வருமானத்திற்கும் வேறு வழியில்லை என்பதால் தனது மகன்களை எவ்வாறு படிக்க வைப்பது  என்று தெரியவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வகையில் தனக்கு ஏதாவது வேலை வழங்க வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: