கொரோனாவால் மூடப்பட்ட பெரிய கோவில்... தலையாட்டி பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூர் பெரிய கோவில் மூடப்பட்டதால், 200க்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த தலையாட்டி பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தள்ளாடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா காரணமாக சுற்றுலா தலங்கள், கோவில்களுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய கோயிலை நம்பி உள்ள சிறுகுறு வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை சுற்றி பார்ப்பதற்காக  வெளிநாடுகள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த  சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்வர்.

  கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் தஞ்சையின் பாரம்பரிய தலையாட்டி பொம்மையை  வாங்கிச் செல்வர்‌. கடந்த ஆண்டும் தடை உத்தரவால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டதால் நிம்மதியாக இருந்தோம், இந்நிலையில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி இருப்பதாக தலையாட்டி பொம்மை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... Chithirai Festival: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா: கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

  இதுகுறித்து பொம்மை கடை வியாபாரி வடிவேல் கூறுகையில்,” பொம்மை கடை நடத்தி வரும் வியாபாரிகள் மட்டுமின்றி தலையாட்டி பொம்மை செய்யும் 200கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றன. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கி தொழிலாளர்கள் நலனை காக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

   செய்தியாளர்:எஸ்.குருநாதன், தஞ்சாவூர்   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: