தஞ்சையில் கோவாக்சின் கிடைப்பதில் சிக்கல்: 2வது ஊசி போட முடியாமல் மக்கள் தவிப்பு!

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவாக்சின் ஊசி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், இரண்டாவது டோஸ் போட முடியாமல், உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர்

 • Share this:
  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகிறது.   மாவட்டத்தில், தற்போது 5399 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொற்று ஒருபக்கம் அதிகரித்த போதிலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு காரணமாக ஏராளமானோர் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

  தொடக்கத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 1,79,000  பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் கோவிஷீல்டு ஊசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் ஊசி தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.

  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கோவாக்சின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸ் போடுவதற்கான காலக்கெடு, ஒரு வாரத்திற்கு மேலாக கடந்து விட்டது. அரசு மருத்துவமனைகளில் ஊசி இல்லை என திரும்பி அனுப்பி விடுகிறார்கள். ஊசி குறித்து கேட்டாலும் முறையான பதில் அளிப்பது இல்லை.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸ் காலதாமதாக செலுத்திக்கொண்டால், உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது” எனறு தெரிவிக்கின்றனர்.

  இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) நமச்சிவாயத்திடம் கேட்டபோது,  தற்போது மாவட்டத்தில் 77 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கோவிஷீல்டு போடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஊசிகள் இருப்புள்ளது என்று தெரிவித்த அவர், கோவாக்சின் சில நாட்களாக வராத நிலையில், இரண்டு நாள்களில் வந்து விடும். பொதுமக்கள் யாரும் அச்சம்பட தேவையில்லை. ஊசி வந்த பிறகு முறையாக செலுத்தப்படும் என்று கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் பணையம்
  Published by:Murugesh M
  First published: