முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இராஜராஜ சோழன் சதயவிழா... கொரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறும்!

இராஜராஜ சோழன் சதயவிழா... கொரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறும்!

இராஜராஜ சோழன் சதயவிழா

இராஜராஜ சோழன் சதயவிழா

இராஜராஜ சோழனின் 1,036 வது சதய விழா வருகிற 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று இராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார், அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது.

  • Last Updated :

இராஜராஜ சோழனின் சதயவிழாவை முன்னிட்டு பந்தல் கால் நடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே விழா நடைபெறும் என விழா குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சோழ அரசர்களில் மிகழும் புகழ்பெற்று விளங்கியவர் மாமன்னர் இராஜராஜ சோழன்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான,  உலக புகழ் பெற்ற தஞ்சை  பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் கொண்டாப்படும்.

அதேபோல் இந்தாண்டு 1,036 வது சதய விழா வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார், அதனை தொடர்ந்து பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விழாவினை முன்னிட்டு பெரிய கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

முன்னதாக பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விழா குழுவினர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவானது கொரோனா பரவல் காரணமாக  இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மழை வெள்ளத்தால் கரூரில் 100 ஏக்கருக்கும் மேல் நெல், வாழை பயிர்கள் சேதம்

First published:

Tags: Rajarajacholan, Thanjavur