• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தஞ்சையில் 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்!

தஞ்சையில் 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை: பொதுமக்கள் ஏமாற்றம்!

தடுப்பூசி தட்டுப்பாடு

தடுப்பூசி தட்டுப்பாடு

மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் கோவிஷுல்டு  மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும், எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பூசி போட வர வேண்டாம் என்றும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 117 மையங்களிலும் தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நோய்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.  கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள  தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் ஆகிய இடங்களில்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இது தவிர தடுப்பூசி போடுவதற்கு தனியாக மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 117 மையங்களில் தடுப்பூசி போட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்ட வந்த நிலையில் தற்போது தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் கோவிஷுல்டு  மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும், எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பூசி போட வர வேண்டாம் எனவும் தடுப்பூசிகள் ஜூன் 1ம் தேதி வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க.. மீனவர் வலையில் சிக்கிய ராட்சத உளுவை மீன்..

    இதனால், தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்  தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்டி வந்ததாகவும், இங்கு ஊசி இல்லை என்பதால் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்வதாகவும் தெரிவித்தனர்.  தடுப்பூசிகளை போதிய அளவில் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர்:எஸ்.குருநாதன்- தஞ்சாவூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: