அரசு வழங்கிய நெல் விதைகள் நாற்று விட்டு, 12 நாட்களாகியும் முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ம் தேதியும், கல்லணையிலிருந்து 16ம் தேதியும் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி , மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வரகூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்ற விவசாயி தனது 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கருக்கு தனியாரிடமிருந்து ஏ.டி - 36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்யுள்ளார். மீதமுள்ள 2 ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து கோ-51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்ய விதையை விதைத்துள்ளார்.
ஆனால், நற்று 13 நாட்களுக்குப் பிறகு, தனியாரிடம் வாங்கிய நெல் விதைகள் நன்கு முளைத்துள்ள நிலையில், அரசின் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல் முளைக்க வில்லை .இதனால் அதர்ச்சியடைந்த வீரமணி, வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து வீரமணி கூறுகையில், விதைத்த நெல் விதைக்கு மாற்றாக புதிய விதை வழங்க வேண்டும். மேலும், ஏற்கனவே விதை வீணாகிய நாற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இது போன்ற தரமற்ற விதை நெல் வழங்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், தரமற்ற விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்காமல் தடை விதிக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க: ஸ்கூல் ஃபீஸ் பாக்கியை கட்டுமாறு பெற்றோர்களை டார்சர் செய்யும் தனியார் பள்ளிகள்...
இதுகுறித்து வேளாண்மை இயக்நர் ஜெஸ்டீன் கேட்ட போது, விவசாயி புகார் குறித்து நேரிடையாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட விதை நெல் 300 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு யாரும் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.