செவிலியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா: அரசு மருத்துவமனை மூடல்!

திருப்பனந்தாள் மருத்துவமனை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த செவிலியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து. அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

 • Share this:
  தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த செவிலியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து. அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

  தஞ்சாவூர்  மாவட்டத்தில் இதுவரை 38,057 நபர்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 5,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  433 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

  கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள்  பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,   பணியில் இருந்த 4 செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 5 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  அரசு மருத்துவமனை மூடப்பட்டது. செவிலியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

  தொடர்ந்து  மருத்துவமனை முழுவதும்  கிருமிநாசினி  தெளிக்கப்பட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இதேபோல் திருப்பனந்தாள் கடைத்தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும்  கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அப்பகுதிவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: