தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA )அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் சமூக ஊடகத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும், கிளாபத் அமைப்பின் தலைவர் மண்ணை பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த அகமது என்பவருது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மொத்தம் மூன்று இடங்களில் சோதனை நடைபெற்றது. ஒரு இடத்திற்கு 3 பேர் வீதம் மூன்று இடங்களில் 9 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கால் டாக்சி ஓட்டுநர் இறப்பில் திடீர் திருப்பம்... விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதி கைது
சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் மொபைல் போன், ஹார்டுடிஸ்க், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.