முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Shawarma: தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை

Shawarma: தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை

ஷவர்மா

ஷவர்மா

500-க்கும் மேற்பட்டோர் தங்கள் கடையில் சாப்பிட்டதாகவும், மூவரை தவிர வேறு யாருக்கும் பிரச்னை இல்லை என்றும் கடை நிர்வாகம் கூறியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதற்கு முன்பே கடையில் உள்ள பொருட்களை, பின்பக்கம் வழியாக அப்புறப்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். பல்வேறு இடங்களில் ஷவர்மா விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் பிரவீன், பரிமலேஸ்வரன், மணிகண்டன் ஆகியோர்  ஒரத்தநாடு பிரிவு சாலையில் உள்ள ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். மூவரும் விடுதிக்கு சென்ற பின்  உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

அவர்கள் மூவரும்  ஒரத்த நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும்   உடல் ஒவ்வாமை அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக,  தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், சிக்கன் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை, சோதனைக்காக அனுப்பியுள்ளனர். கடைக்கு  ஒரு வாரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் கடையில் சாப்பிட்டதாகவும், மூவரை தவிர வேறு யாருக்கும் பிரச்னை இல்லை என்றும் கடை நிர்வாகம் கூறியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதற்கு முன்பே கடையில் உள்ள பொருட்களை, பின்பக்கம் வழியாக அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த காட்சிகள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் சவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை.. 57 கிலோ பழைய சவர்மாக்கள் பறிமுதல்!!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக பல  ஷவர்மா விற்பனையகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஷவர்மா விற்பனை செய்யக் கூடிய ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். கோழிக்கறி, மாவு உள்ளிட்டவற்றின் தரத்தை ஆய்வு செய்த அவர்கள், அளவுக்கு அதிகமாக கலர் பவுடர் தடவி வைத்திருந்த 10 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தனர்.

நாகையில் . உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், இறைச்சிக் குடோனில் இருந்து 250 கிலோ அளவிலான கெட்டுப் போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: உள்ளாடை விலை உயர்கிறது.. திருப்பூர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர்.எஸ்.புரம், உள்ளிட்ட பகுதிகளில் 4 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். 73 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 57  கிலோ பழைய சவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.

 இந்நிலையில், கேரள மாணவி உயிரிழப்புக்கு காரணமான  ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்ததை கோழிக்கோட்டில் உள்ள ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா குடல் பகுதியைத் தாக்கும் தொற்று. நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறியாக ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு உண்டாகும்.  .  ஷிகெல்லா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவைத் தயாரிப்பதற்கு முன்னர்  கழிப்பறையை பயன்படுத்தி விட்டு  கைகளை சரியாகக் கழுவாத பட்சத்தில், பாக்டீரியா  உணவு வழியாக மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புண்டு.  இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்நோய்த்தொற்றின் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்.  வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும்  வாந்தி போன்ற ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

First published:

Tags: Chicken, Food, Thanjavur