வாழை தோப்பில் புதைத்து வைத்து சாராயம் விற்பனை!

கைப்பற்றப்பட்ட சாராயக் கேன்கள்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளதால், கள்ளத்தனமாக மது விற்கப்படுவது அதிகரித்துள்ளது.

 • Last Updated :
 • Share this:
  கும்பகோணத்தில்  விற்பனைக்காக வாழை தோப்பிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த  ரூ.6 லட்சம் மதிப்பிலான சாராய கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் 2-ம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. நாளை முதல் கடும் ஊரடங்கு அமலாக உள்ளநிலையில், இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட தடை தொடர்கிறது.

  இதனால், பல பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.  கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.  மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கொண்டுவரப்பட்டு கும்பகோணத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  இது தொடர்பாக போலீசார் தீவிர சோதனை   நடத்தி வருகின்ரனர். அதன்படி கடந்த 19-ம் தேதி திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 32 கேன்களில் 2650 லிட்டர் எரிசாராயமும் ரூ. 10 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து இன்று கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே உள்ள சோழியவிளாகம் மரத்துறை காமராஜபுரம் காலனியில் உள்ள காலிங்கராஜன் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பந்தநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காலிங்கராஜன் வீட்டை சோதனை செய்தனர்.

  எனினும் சாராய கேன் எதுவும் அங்கு இல்லை. இதையடுத்து, அவரது வீட்டின் அருகில் உள்ள இளங்கோ என்பவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

  ஆனால் வீட்டிற்குள் சாராய கேன்கள்   எதுவும் கைப்பற்றப் படவில்லை. பின்னர் அவரது வீட்டின் அருகே இளங்கோ என்பவருக்கு சொந்தமான வாழைத் தோப்பில் சோதனையிட்டனர்.  அப்போது நிலத்தில் சாராய கேன்கள் பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

  இதையடுத்து போலீசார் மண்ணைத் தோண்டி பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 புதுச்சேரி மாநில எரிசாராய கேன்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.தலைமறைவான காலிங்கராஜனை பந்தநல்லூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: