மாஸ்க் அணியாத அரசு பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்களுக்கு அபராதம்!

அபராதம் வசூலிப்பு

முகக்கவசம் அணியாத ஓட்டுனர்கள் 5 பேருக்கு தலா 500 ரூபாய், நடத்துனர்கள் 4 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பயணிகள் 28 பேருக்கு தலா 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது

  • Share this:
தஞ்சையில் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வந்த ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகள், அலுவலகங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா ஆபத்து முழுமையாக விலகாததால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது.

முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தப்படுத்தும் விதமாக சானிட்டைசர் வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.இதனை மீறுவோரிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை: தமிழகத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா!


அந்தவகையில்,  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்க தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஆர்டிஓ சுகந்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்!
வெளி மாவட்டங்களில் இருந்து பயணிகளை ஏற்றிவந்த அரசு பேருந்துகளில் மேற்கொண்ட ஆய்வில் முகக்கவசம் அணியாத ஓட்டுனர்கள் 5 பேருக்கு தலா 500 ரூபாய், நடத்துனர்கள் 4 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பயணிகள் 28 பேருக்கு தலா 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், மருந்து கடைகளில் முகக்கவசம் அணியாமலும், வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கான சானிடைசர் வைக்காமலும் இருந்ததற்காக 13 கடைகளுக்கு 500 முதல் 5000 வரை அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: