ஆண் நண்பர் இருப்பதை தெரிந்துக்கொண்டு மிரட்டினார்: தஞ்சை சாஸ்த்ரா பல்கலை பேராசிரியர் மீது முன்னாள் மாணவி பாலியல் குற்றச்சாட்டு!

பாலியல் குற்றச்சாட்டு

எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது பேராசிரியர் வரதராஜனுக்கு தெரியும். இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் கூறிவிடுவதாக சொல்லி என்னை மிரட்டினார். மேலும், அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து ஆசிரியர்கள் அறைக்கு வரவழைத்தார்

 • Share this:
  தஞ்சை, சாஸ்த்ரா பல்கலைக்கழக ஊழியர்கள்  பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதாக முன்னாள் மாணவிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தங்களது ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்ததையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னாள், தற்போதைய மாணவ-மாணவியினர் தாங்கள் பாலியல் இன்னல்களுக்கு உள்ளானது குறித்து ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  அந்த வகையில், தஞ்சாவூர் வல்லம் பகுதியில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக ஊழியர்கள் சிலர் மீது அவர்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் சிலர்  குற்றச்சாட்டுகள் கூறியுள்ளனர்.பாலியல் தொந்தரவு செய்த நபர்களின் பெயர்களையும், எந்த வகையில் பாலியல் தொந்தரவு செய்தனர் என்பதையும் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

  இப் பல்கலைக் கழக பேராசிரியராக இருந்த வரதராஜன் என்பவர் தன்னிடம்  ‘முறைகேடாக’ நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.“ அதில், “எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருக்கிறார் என்பது பேராசிரியர் வரதராஜனுக்கு தெரியும். இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் கூறிவிடுவதாக சொல்லி என்னை மிரட்டினார். மேலும், அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து ஆசிரியர்கள் அறைக்கு வரவழைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், மாணவி 3வது ஆண்டு படித்தபோது, புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்த ஊழியர் அவரை  தேர்வுக்கூடத்தில் காக்கவைத்து, ஏனைய மற்ற மாணவ, மாணவியர் அனைவரும் சென்ற பின்னர் அவரிடம் சில்மிஷம் செய்ததாகவும் மாணவியின் வினா தாளில்   ஆசிரியர் தனது மொபைல் எண்ணை எழுதினார் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு...

  இது தொடர்பாக ஆதாரபூர்வமாக பல்கலைக்கழக டீனிடம் புகார் செய்தபோதும், நடவடிக்கை எடுக்க அவர் மறுத்துவிட்டதாக மாணவி கூறியுள்ளார். ,

   

  இதேபோது  5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவி அவர், தனது சமூக ஊடகத்தில்,  பல்கலைக் கழக ஊழியர் நடராஜன் என்பவர் ஒருநாள் இரவு 10 மணியளவில் திருச்சி ஏர்ப்போர்ட்டிலிருந்து சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கு தன்னை காரில் அழைத்து வரும்போது முன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

  அவரது மனைவி வெளியூர் சென்றிருப்பதாகவும், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் கூறி தன்னை அவரது வீட்டில் அன்றிரவு தங்குமாறு வற்புறுத்தியதாகவும் அப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். சாஸ்த்ரா பல்கலைக் கழகம் வந்தடைந்ததும் காரிலிருந்து ‘தப்பித்தேன்…பிழைத்தேன்’ என உள்ளே ஓடிச் சென்றுவிட்டதாகவும், நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய அழுதுகொண்டே இருந்ததாகவும் அப்பெண்  கூறியுள்ளார்

  Must read... நடிகை பின்னால் பணம் பறிக்கும் கும்பல்- புகார் குறித்து அமைச்சர் பதில்...

  .இதுபற்றி, திரு. வைத்யா மற்றும் மாணவிகளின் காப்பாளர் சாந்தி ஆகியோரிடம் புகார் செய்ததாகவும், ஆனால் அவர்கள் இருவரும் ‘இரவு 10 மணிக்கு மேல் வந்தது உன்னுடைய தவறு. அவர் உன்னுடைய    உறவினர். எனவே உனது பெற்றோரிடம் கூறி இப்பிரச்சினையைதீர்க்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் புகார் செய்யாதே’ எனக் கூறிவிட்டதாகவும் அம் மாணவி பதிவிட்டுள்ளார்.
  இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் வரதராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.  சாஸ்த்ரா பல்கலைக் கழக மாணவிகளின் இந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: குருநாதன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: