• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

தற்போது  வர்த்தகம் சார்ந்த ஒன்றாக மொய் விருந்து வளர்ச்சி அடைந்துள்ளது. ஆடி, ஆனி மாதங்களில் தஞ்சை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொய் விருந்து மூலம் பல நூறு கோடி ரூபாய் வரை வசூலாகும்.  

  • Share this:
    கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழகத்தின் தஞ்சாவூர்,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் மொய் விருந்து வழக்கம் நடைமுறையில் உள்ளது.  பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தங்களின் நிதி தேவைக்காக மொய் விருந்து நடத்துவார்கள்.  மொய் விருந்து வைப்பவர் சாதி மதம் பேதமின்றி  ஊர் மக்கள் அனைவரையும் மொய் விருந்துக்கு அழைப்பார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விழாவுக்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் மாலை அணிவித்து வரவேற்று, ஆடு,கோழி என விதவிதமான  உணவு வகைகளை  பரிமாறுவார்கள்.  மொய் விருந்தில் கலந்துகொள்பவர்கள் சாப்பாடு முடிந்த பின்னர் மொய் வைப்பார்கள். சில இடங்களில் லட்சங்களில் கூட மொய் வைக்கப்படுவது உண்டு.

    இதையும் படிங்க: சிறுவனின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் கிராம மக்கள்!


    தற்போது  வர்த்தகம் சார்ந்த ஒன்றாக மொய் விருந்து வளர்ச்சி அடைந்துள்ளது. ஆடி, ஆனி மாதங்களில் பொதுவாக மொய் விருந்து நடத்தப்படும். இந்த மாதங்களில் தஞ்சை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொய் விருந்து மூலம் பல நூறு கோடி ரூபாய் வரை வசூலாகும்.

    மேலும் படிக்க: ஆடிமாத பூஜை: சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போராட்டம்  அறிவிப்பு!


    தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாக நீங்காத நிலையில், மொய் விருந்து நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருசில இடங்களில்  மொய்விருந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து மொய் விருந்து நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரித்துள்ளார்.  மொய் விருந்து நடத்தப்படும் தனியார்  மண்டபங்களின் உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: