ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன்னியர் சங்க துணைத் தலைவர் ஸ்டாலினை கொல்ல சதித்திட்டம் - பா.ம.க மாநில துணை செயலாளர் கைது

வன்னியர் சங்க துணைத் தலைவர் ஸ்டாலினை கொல்ல சதித்திட்டம் - பா.ம.க மாநில துணை செயலாளர் கைது

வன்னியர் சங்க  துணைத் தலைவரை கொல்ல சதித்திட்டம் -  பா.ம.க. மாநில துணை செயலாளர் கைது

வன்னியர் சங்க துணைத் தலைவரை கொல்ல சதித்திட்டம் - பா.ம.க. மாநில துணை செயலாளர் கைது

சேலம் மத்திய சிறையில் இருந்து கொலைக்கான சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வன்னியர் சங்க மாநில துணை தலைவரை, கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் பா.ம.க துணை பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்க மாநிலத் துணை தலைவராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு இவரை கொலை செய்ய வந்த மர்ம கும்பலை போலீஸார் பிடித்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட லாலி மணிகண்டன் என்ற நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: ஸ்டாலினை ஆலோசனைக் குழுத்தலைவர் என அழைக்கலாமா - அர்ஜூன் சம்பத் கேள்வி

ஸ்டாலினை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் K.R. வெங்கட்ராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.   சேலம் மத்திய சிறையில் இருந்து கொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாக லாலி மணிகண்டன் போலீஸார்  விசாரணை  தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 இந்நிலையில்  கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதில்  கும்பகோணத்தை சேர்ந்த K.R. வெங்கட்ராமனுக்கும் தொடர்பு இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து இன்று அவரை கைது செய்த காவல்துறையினர் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைத்தனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Arrested, Crime | குற்றச் செய்திகள், PMK, Police